தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை - 53 = 104

“அலைபாயும் நெஞ்சம் கவிபாடுது - அது
காதலுக்கு தூதுச்செல்ல துதிபாடுது
காதல் கொண்ட கண்கள் கனாகாணுது – அது
கண்ணாளனை காண தினம் ஏங்குது…!”

வானத்திலே விண்மீன்கள் எக்கச்சக்கம் – அது
மண்ணுலக கண்களுக்கு விருந்து வைக்கும்
அந்திபகல் பாராமல் காமம் தோன்றி – அது
முந்தி விரிக்க தூண்டுதடி நெஞ்சில் மோதி..!

மகரந்த பூக்களில் தேனெடுக்க
சுத்தி சுத்தி வருகிறது கருவண்டு
சுவைபட்ட வண்டுக்கு போதையேற
மயக்கத்திலே அமருதடி பூவின்மேலே

மாமர தோப்புக்குள் மன்மத கிளிகள்
மனம்போன போக்கில் கொய்யுது கனிகள்
கொய்து முடித்த சோர்வில் அவைகள்
ஓய்வு எடுக்குது கொஞ்சம் இடையில்..


காதலிக்க துடிக்கும் இளம் நெஞ்சம் – அது
காவலுக்கு பயந்தால் ஏது இன்பம்..?
பயங்கள் நிறைந்த காதல் வர்கம் - அது
பயணங்கள் போகாது நீண்ட தூரம்..!

மேகத்தில் நீராடும் மஞ்சள் நிலவே
மோகத்துக்கு நீதானே தூது புறா…
நாணத்தில் தவிக்கும் எங்கள் உறவை
விரசாய் வரச்செல் விரக உலா..!

மாங்கல்யம் சூடும் மணப்பெண்ணை
மாலைகள் போட்டு வரவேற்போம்
மாலை மசங்கும் பொன்னந்தி வேளையில்
முதலிரவு அறையில் தள்ளி விடுவோம்.!

எழுதியவர் : சாய்மாறன் (14-May-16, 12:33 pm)
பார்வை : 51

மேலே