எலியும் பூனையுமாக

எலியும் பூனையுமாக
விளையாடிய விளையாட்டு
மனதில் தோன்ற
சென்றேன் கடந்த
காலத்திற்கு.

நான் எலியாக
என் நண்பன் பூனையாக
ஆடினோம் ஒரு முறை.
பள்ளியின் விளையாட்டு
திடலில்.

என் நண்பனோ
உடல் உறுதியும்
மன உறுதியும்
ஏராளமாக வாய்க்கப்
பெற்றவள்.

நானோ ஒரு பயந்தவள்
உடலோ மெலிவு
இருந்தும் அவளை
எதிர் கொண்டேன்
துணிச்சலாக.

ஓடினேன் சுற்றி
சுற்றி குனிந்தும்
நிமிர்ந்தும் அவளுடைய
பிடியை விட்டு
சாமர்த்தியமாக.

ஓரு நேரத்தில்
அவள் என் அருகே வந்து விட
பிடிபட்டோம் என்று
நான் நினைக்க
பாவம் அவள்
தடுமாறி விழுந்தாள்.

தப்பித்தேன் பிழைத்தேன்
என்று நான் குதிக்க
நினைத்தேன் ஒரு முகமாக
வெற்றிக்கும் தோல்விக்கும்
திறமையோ வலிமையோ
காரணம் அல்ல
நேரம் தான் என்று தெளிந்தேன்,.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (15-May-16, 5:17 pm)
பார்வை : 1493

மேலே