உயிரின் ஒலி

ஒரு சின்ன பையன் ரோட்டுல நடந்த போய்கிட்டு இருந்தான் யாரே அழுகுர சத்தம் அவன் காதுல கேட்டுச்சு சுத்திலும் தேடி பாத்தான் யாரும் இல்ல அவனுக்கு ஒரே பயம்!

பயத்தோட மெதுவ நடந்து வீட்டுக் போலனு திரும்புனான் யாரே அவன இழுக்கு மாரி இருந்தது அவன் உடம்புல இருந்து இரத்தம் வலிந்தது வலி தாங்கம "அம்மா அம்மா"னு அழுது கத்த அரபித்தான் ...

அவனுக் என்ன நடக்குனே தெரியல கண்ண மூடி கண்ண திறக்குறான்.
அவனோட அம்மா சத்தம் கத்தி கதறி அழுறங்க எதுக்குனு அழுறாங்கனு இவனுக்கு தெரில அழுதே பாக்காத அப்பா அப்பா கண் கலங்கி இருந்தது எப்பொழுதும் துருதுருனு இருக்குர தம்பி சோகமா இருந்தான் .
அம்மா பக்கதுல,போலாம்னு ஒரு அடி எடுத்து வைத்தான். அப்பதான் தெரிந்தது அது அவன் வீடு இல்ல சுத்திலும் பார்த்தான்.
அவனுக்கு அது என்னனு தெரியல ஏதோ அலர சத்தம் கேட்டது .அழுது கொண்டிருந்த அம்மாவின் அருகில் சென்றான்.
அவனை வழுவாக யாரே மீண்டும் இழுத்தது போல் உணர்தான் மின்சாரம் அவனே தாக்கியது போல் இருந்தது தன்னை இழுப்பலது யார் என்று பார்த்தான்.
அவனை கண்டதும் அதிர்ச்சி அடைந்தான் .அது வேறு யாரும் இல்லை அவனேதான் அவனைப் போல் அங்கு ஒரு சிறுவன் யாரே அவனை எழுப்ப முயற்சிகின்றனர் .
அதை பார்து கொண்டிருக்கும் போதே மின்னல் ஒன்று அவனை தாக்கியது.
ஒரு நொடி அவனால் எதையும் கேட்க முடியவில்லை. ஒரு மெல்லிய சத்தம் அவன் காதுகளில் ஒலித்தது."லப் டப் லப் டப் லப் டப்" கண்களை திறந்தான் அப்பொழுது அவனுக்கு புரிந்தது அவன் கேட்பது அவன் உயிரின் ஒலி என்று.............அந்த ஒலி மிக முக்கியம் என்று.

எழுதியவர் : முத்துச்செல்வம் (15-May-16, 9:09 pm)
சேர்த்தது : முத்துச்செல்வம்
பார்வை : 247

மேலே