தங்கைக்கு ஒரு வாழ்த்து மடல்

இறையருளால் ....இன்று

முப்பத்திரண்டாம் அகவையினை தொடும்

எங்கள் அன்புவனத்தின் முத்தான கடைக்குட்டியே .

ஆம் பாசம் ஒன்றே சுவாசம் என்று வாழும்

எங்களின் பாசம் மிகுந்த பூத்தொட்டியே ...

இறையருளோடு ... என்றென்றும்

மகிழ்வோடு மங்களமும், நலமோடு வளமும்

நீடித்த ஆயுளும் நிம்மதியான பெறு வாழ்வும் பெற்று

மென்மேலும் நீ உயர்ந்து .....

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு

வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி

வாழ்த்தி எழுதும் வாழ்த்து மடல் இது ...

தங்கை எனும் சொல் இதற்க்கு.....

"தாய்மை" எனும் பொருளும் உண்டு ....

என இந்த தாரணிக்கு சொல்ல வந்த தாரகையே ...

எந்தன் தாயுமான தங்கையே .... உன் கள்ளமில்லா பாசத்தில்

நிறைந்து போவது நெஞ்சம் மட்டும் அல்ல எந்தன் கன்னங்களும் தான் ....

இன்னும் நூறு ஜென்மம் என்றாலும் ....

நீயே வேண்டும் எந்தன் தங்கையாய்

என நான் வேண்டாத தெய்வம் இல்லை .... ஆம்

என் உயிரான தங்கையளே

நான் வேண்டாத தெய்வம் இல்லை

இன்னும் கோடி கோடி கவிகள் கொண்டு சொன்னாலும்

பாசம் மிகுந்த என் அன்பு தங்கையே !

உன் அன்பிற்கு அவை எல்லாம் ஈடாகுமா ?

ஈடு இணைகள் இல்லாத எங்களின் அன்பு தேசத்து பிறைநிலவே ....

என்றென்றும் உந்தன் புன்னகையில்

வாழ்ந்திருக்கும் இந்த அண்ணன் அன்பு மனம் ....

ஆம் இனி என்றென்றும் உன் வாழ்வில் ....

புன்னகை ஒன்றே பூத்திருக்கட்டும் ....

உன்னை கொள்ளை கொண்ட கவலைகளும் ...

நீ கடந்து வந்த சோதனைகளும் .... உதிர்ந்த மலராக

நேற்றோடு அது நிலமோடு போகட்டும் .... ஆம்

என் செல்லமான தங்கையே ...

இனி உன் வாழ்வில் .... என்றென்றும் புன்னகை ஒன்றே பூத்திருக்கட்டும் ....

முள்ளாய் கொல்லும் கோபம் வேண்டாம் ...

முல்லை பூவாய் பாசம் கொண்டு ... நேசம் வெல்லும் தந்திரத்தை

எனக்கு சொல்லி கொடுத்த தங்கையளே...

நீ பிறந்த இந்நாளில் அதையே நானும் உனக்கு சொல்லுகின்றேன் ....

அன்பு கொண்டு அகிலம் வென்று .....

புன்னகை மாறாமல் புது வேகம் குறையாமல்

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு நீ வாழ

அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன் ....

நீ பிறந்த இந்நாளில் உன்னை காண ஏங்குகின்றேன் ....

கடல் கடந்து வந்ததனால் கடவுளிடம் வேண்டுகின்றேன் ... என் சார்பில் உன்னை வாழ்த்த ....

அவர் நிச்சயமாய் வந்திருப்பார் இந்நேரம் எனக்காக உன்னை வாழ்த்த ....

ஏனென்றால் அவர் படைத்த படைப்பினிலே

அதி உன்னதமனவள் நீ யன்றோ ....

எந்தன் உயிரான தங்கையே .

உன்னை வாழ்த்தாத நாட்கள் இல்லை ஆம்

உன்னை வாழ்த்த எந்தன் வாழ்நாட்களும் போதாது என்ற போதும் ....

நீ பிறந்த இந்நாளில் உன்னை வாழ்த்தும் எல்லா அன்பு உள்ளங்களோடு நானும் வாழ்த்துகின்றேன் ....

வாழிய நீ பல்லாண்டு ..... பல்லாண்டு ... பல கோடி நூற்றாண்டு ..... ...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ...

என்றும் அன்புடன் ...

உன் அன்பு அண்ணன் ....

எழுதியவர் : கலைச்சரண் (16-May-16, 12:50 pm)
பார்வை : 219

மேலே