நன்றி பாக்யா வார இதழ் அட்டைப்படதிற்கு கவிதை கவிதையின் கரு கவிஞர் இரா இரவி
நன்றி பாக்யா வார இதழ் !
அட்டைப்படதிற்கு கவிதை !
கவிதையின் கரு !கவிஞர் இரா .இரவி
வலப்பக்கம் ஆண் அழகன்
இடப்பக்கம் பெண் அழகி
பின் பக்கம் கடல் !
புரூஸ்லீயின் தவம்
கலைக்க வந்த
மேனகையே !
ஒரு பக்கம் சிலை
ஒரு பக்கம் கலை
காண்போரின் நிலை ?
புரூஸ்லீ யுடன்
மோதினால்
தோல்வியே !
ஒரே உலகம்
ஒரே கனவு
ஒரே தேவதை !
பார்வைக்கு
மயங்காது
சிலை !
கராத்தே வீரரிடம்
பலிக்காது
கன்னியின் முயற்சி !
உயிருள்ள சிலை
உயிரோட்டமான சிலை
வாழ்க சிற்பிகள் !
புரூஸ்லீ வரிசையில் வந்ததவர்
நிறுத்தினார் சண்டை
ஜாக்கிசான்