வெண்டுறை படைத்தவர்க்கு பாமாலை

விண்ணுலக முப்பெரும் தேவர்கள் தேவியர் தாழ்போற்றி
விந்தாக வீழ்ந்தவனை ஓர்முத்தாய் பெற்றதாய் தாழ்போற்றி
பெற்றமகள் கைத்தலம் பற்றவைத்த அன்னையுன் தாழ்போற்றி
அன்றாடம் இன்பக் கடலில் அழைத்தென்னைச் சென்று
அமுதமும் தந்த குமுத முகத்தழகி தாழ்போற்றி
அன்னைக்கு அன்னை பராசக்தி தாழ்போற்றி போற்றி
அணிவித்தேன் நற்தமிழ்பா மாலை யுமக்கு