மே மாதம் 16

மே மாதம் 16

இன்று இரயில் பயணம்
ஊரெங்கும் மழை
சற்று விரைவில் புறப்பட்டேன்

வந்த தேதியை பார்த்தால்
காலண்டர் உண்மையோ என குழப்பம்

இரயில் நிலையம் அடைந்தேன் இரயில் வந்ததும் நேரம் விரைவில் நகர்கிறது

நேரம் சரியோ என குழம்பினேன்
நேரம் விரைகிறதோ என மனம் சுழித்தேன்

தொலைபே‌சியில் இரயில் ஏறியதை
கூறினேன் தாய் தந்தையிடம்

ஜன்னல் வழி இரசித்தேன்
என் முன்னாள் மழைத்துளி
முன்னாள் மழைத்துளி

குரலில் மாற்றம் என
அம்மா கண்டு பிடிக்க

எல்லாம் சரியாகும் என
அப்பா குரலில் கேட்க

ஊருக்கு செல்கிறேன் என
சுய நினைவு அடைந்தேன்

மனம் வீட்டில் இருந்தது என உணர்ந்தேன்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (16-May-16, 6:49 pm)
பார்வை : 82

மேலே