என்னவளே எழுந்திடு
![](https://eluthu.com/images/loading.gif)
மேகக்கூட்டங்களை
போர்வையாய் போர்த்தி,
இரு நிலவுகளை
இமைக்கதவில் பூட்டிவைத்து, மூச்சுக்காற்றால் போர்வைக்குள் உஷ்ணம் தந்து, சுருண்டிருக்கும் கருக்குழந்தை போல் புலனடக்கி, கலையாத கனவில் இன்னும் மிதப்பவளே,
என் கை கொஞ்சம் தீண்ட உறக்கம் முறிப்பவளே,
நானும் தெநீரும் உனக்காக காத்திருக்கிறோம்., உன் இதழ் முத்தம் பெற......எழுந்திடு