கலங்காதே என் செல்லமே

அம்மாவின் உறவிற்கு ஈடேதைய்யா
அப்பாவின் அன்பிற்கு இணை ஏதைய்யா
புரியாமல் நாம் வாழ்கிறோம்
தெரியாமல் வழி மாறினோம்
தாயின் முகம் எதுவென்று தெரியாதைய்யா
தந்தையிடம் உறவேதும் கிடையாதைய்யா
எதற்காக நாம் வாழ்கிறோம்
பூமிக்கு சுமையாகிறோம்

ஆராரோ தாலாட்டு வேண்டும் அம்மா
நான் தூங்கி நாளாச்சி எங்கே அம்மா
தோள் மீது நான் சாய வா வா அப்பா
ஊரென்ன பேரென்ன தெரியாதப்பா
உனக்காக எனக்காக வாழுவதில் இன்பமில்லை
நமக்காக வாழ்ந்தாலே அது போதுமே
கருவாகி உருவானதே

எதற்காக நாம் இங்கு பிறந்தோமைய்யா
சென்மங்கள் பல வேண்டி தொழுதோமைய்யா
நமக்கான நல் வாழ்க்கை இதுதானய்யா
எல்லார்க்கும் எல்லாமே கிடைக்கா தைய்யா
உன் கையே உனக்கான மூலதனம் என்று நம்பு
ஊர் போற்ற வாழ்ந்தாலே அது போதுமே
கலங்காதே என் செல்லமே

எழுதியவர் : நந்துதாசன் வள்ளுவன் @ த.நா (17-May-16, 3:41 pm)
பார்வை : 115

மேலே