உன் கண் இமைகளை நிமிர்த்திபார் 555

தோழியே...

நீ பெண் என்பதால் உன்னை சிலர்
அடிமைபடுத்த நினைக்கலாம்...

நீ சோர்ந்துவிடாதே...

உன் வளைகரங்கள் உயர்ந்தால்
நீ வானை வளைக்கலாம்...

உன் கண்ணிமைகள்
சற்று நிமிர்ந்தால்...

ஆதிக்க அரக்கர்களை
அஸ்தமனமாக்கிவிடலாம்...

நீ சொல் என்னும் வாளெடுத்து
சுழன்றுபார்...

உன்னை சூழும் சோகங்களை
எல்லாம் நீ சூறையாடி விடலாம்...

என் உயிர் தோழியே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-May-16, 9:08 pm)
பார்வை : 210

மேலே