நட்பின் அடையாளம்

அடையாளம்
இப்படி ஒரு
அடையாளம்

ஆம்
என்னவன் தான்

ஒருநாளும்
மந்திர வார்த்தைகளை
பிரயோகிக்காதவன்

தந்திர நெடியை
அறிந்திடாதவன்

என் சிரிப்பொலியை
நெஞ்சில் ஏந்துபவன்

விழித்திரையில்
என்னை சுமப்பவன்

நாகரிகம் நட்பு
இரண்டு தண்டவாளங்களில்
வாழ்க்கை தொடர்வண்டியை
செலுத்தும் ஜித்தன்


அதிர பேசாதே
அறிவுருத்தியவன்

பற்கள் தெரியாமல் சிரி
கண்டிப்பில் தாயானவன்

என்றும் கலங்காதே
அரவணைப்பில் தந்தை ஆனவன்

வாழக் கற்றுக்கொள்

வழி காட்டிய,
வழி நடத்தும்
உற்ற நண்பன் அவன்

பிறரை நேசி
எளிதில் நம்பாதே
வீணாக பயம் கொள்ளாதே

நம்பிக்கை தரும்
உடன்பிறப்பு அவன் .

ஓளி தரும்
பகலவன் போல்
திகழட்டும்

எங்கள் நட்பும்
நட்பின் அடையாளமும் .

எழுதியவர் : ரதி ரதி (18-May-16, 3:20 pm)
Tanglish : natpin adaiyaalam
பார்வை : 649

மேலே