பெண்மையே மேன்மை

அடக்கம் அன்பை அள்ளிக் கொடுக்கும்
முடக்கம் இன்றி முழுதாய் உழைக்கும்
சுயநலம் விடுத்து துயரத்தை சகிக்கும்
நயத்துடன் பேச்சில் இனிமை சேர்க்கும்
அன்னை வடிவாய் அகிலத்தை வார்க்கும்
அன்புள்ள தாரமாய் இன்பத்தை வழங்கும்
தளர்வுறும் நேரத்தில் தாங்கிப் பிடிக்கும்
வளர்ச்சிக்கு துணைநின்று தூணாய்த் தாங்கும்
தமக்கை வடிவிலும் வாழ்ந்திட உதவும்
தங்கையின் வாடிவாய் அன்பைப் பொழியும்
மகளென பிறந்தும் பணிவிடை செய்யும்
மனதினில் தோன்றும் கவலையை கொய்யும்
மருத்துவர் செவிலியர் பணியிலும் அன்பை
கருத்துடன் வழங்கி குணம்பெற செய்யும்
இன்முகம் காட்டியே இன்னலை ஓட்டும்
தென்றலைப் போன்று களைப்பை போக்கும்
பயனற்ற செயல்கள் நாம்செய்த போதும்
நயமாய் பேசியே நம்நிலை மாற்றும்
தன்னைக் கொடுக்கும் சந்தன மரமாய்
தன்னிகர் இல்லாத உறவாய் என்றும்
பண்புடன் பழகியே நட்புமாகி
உண்மையாய் வாழும் பெண்மை மேன்மையே
பாவலர். பாஸ்கரன்