தினம் ஒரு தத்துவ பாட்டு - 11 =109

ஏழை என்றும் ஏழையா ?
இதுதான் சமூக நீதியா ?
அவன் வளர்ச்சிப் பாதையில்
ஆயிரம் வேகத் தடைகளா ?

சமதர்ம நாடு நம் நாடு- என
மார்த்தட்டி என்ன பேரு ?
நேர்மை என்ற நேர்க்கோடு- அது
செல்லுது தீய நோக்கோடு !

நீதி வாழும் நமது நாடு - இங்கு
நிம்மதிக்கு நேரமென்பது ஏது ?
சாதி என்ற சாக்காடு – அது
கொடுக்குது நெஞ்சுக்குள் நோக்காடு !

உயரே உயரே பறந்தாலும்
ஊர்க்குருவி பறந்தாய் ஆகாதாம் !
உச்சம் ஏறத் துடிப்பவரை
துச்சமாக மதிக்கக் கூடாதாம் !

உயர்கல்வி என்னும் வியபாரம்
கடைத்தெருவில் விற்கும் பலகாரம்
ஆனது இங்கே அநியாயம் ! – அதற்கு
அரசியல் பின்னனியே உபகாரம் !

பஞ்சு மிட்டாய் விற்பவனை
அஞ்சு காசுக்கும் மதிப்பதில்லை
லஞ்சம் வாங்கி கொழுத்தவனை
வங்கி கடன்கள் மறுப்பதில்லை

தீய சக்தி என்கின்றார்
தாமே தீமை செய்துகொண்டு
இந்த மாயவித்தை அரசியலில்
பாழாய் போவது பொது ஜனம்தான் !

இனிக்க இனிக்க பேசுபவர்கள்
உழைப்பை நம்மிடம் சுரண்டிக்கொண்டு
கொடுக்க வேண்டியதை கொடுப்பதற்கு
குள்ள நரிகள்போல் குலைக்கின்றார் .

எழுதியவர் : சாய்மாறன் (19-May-16, 11:20 pm)
பார்வை : 121

மேலே