தமிழ் தமிழ் தமிழ்

தமிழ் (வீர)பாலில்
பெண் பாலை
கலந்த முதல் ஆண்பால்
# பாரதி

பாரதிக்கு செல்லமா
நீ எனக்கு செல்லம் மா
# கணவன்

எனக்கு
உங்கள் மனைவி
பேரில் சந்தேகம்

என்னடா சொன்ன
நாயே
அவள் சொக்கதங்கம் டா

நான் இப்ப என்னதான்
சொல்லிட்டனு என்ன இப்படி போட்டு
அடிக்கறீங்க


உங்க மனைவி பெயருல தான சந்தேகம்னு சொன்னன்.

அட எரும
அத அப்படியா
சொல்வாங்க.
தமிழ் ஒரு அழகான மொழி
அத கொஞ்சம் மாத்தனாலும்
தலையெழுத்தே மாறும்

***************************
உங்க எல்லாருக்குமே தெரிஞ்சது தான் தமிழ் பாடத்ல வரும்.

இன்று முதல் ஆப்பத்திற்கு சர்க்கரை இல்லை

அந்த பாடம் மிகவும் பிடித்த பாடம் .

நான் மூன்றாவது படிக்கும்
போது என் ஆங்கில ஆசிரியை இலக்கணம்
கற்றுதந்தார்.
அப்பொழுது அவர் உதாரணமாக சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது

அது என்னவென்றால்

ஒருவனுக்கு என்னன்ன
மளிகை வாங்கி வரவேண்டும் என்று
எழுதி ஒரு சீட்டு
கொடுத்தனுப்புகிறார்கள்

அவன் கடையில் அதை இப்படி படித்தான்

சுக்குமி ளகுதி ப்பிலி

உண்மையில் அந்த பொருட்கள்

சுக்கு மிளகு திப்பிலி

ஆதலால் கூறுகிறேன்

தமிழை ஆழமாக படியுங்கள்
அழகாக பேசுங்கள்
அர்த்தமுள்ளதாய் கேளுங்கள்
அர்த்தத்துடன் எழுதுங்கள்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-May-16, 7:40 am)
பார்வை : 207

மேலே