சப்தமின்றி முத்தமிடு

கன்னத்தில் முத்தமிடு - என்
கழுத்தினிலும் முத்தமிடு!

நெற்றி வகிட்டினில் முத்தமிடு – என்
வண்ண இடையினிலும் முத்தமிடு!

மங்கிய நிலவொளியில் முத்தமிடு – ஏங்கும்
தங்கை நிலவு காணாத பொழுதில் முத்தமிடு!

பக்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் – புன்னைமர அக்கா
பார்க்காத தருணத்தில் சப்தமின்றி முத்தமிடு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-16, 9:55 pm)
பார்வை : 619

மேலே