கடலும் நீயும்
கடலும் நீயும் ஒன்று
ஓய்வின்றி ஓசைகளை எழுப்புவதால்
கடலும் நீயும் ஒன்று
வானத்தின் வண்ணத்தை பிரதிபலிப்பது போல்
என் மனதின் எண்ணத்தை பிரதிபலிப்பதால்
கடலும் நீயும் ஒன்று
உன் மனதின் வெண்மையை
அலைகளின் நுரையாய் காண முடிவதால்
கடலும் நீயும் ஒன்று
கண்டதும் கவிதை தோனுவதால்
கடலும் நீயும் ஒன்று
என் மனதிற்கு நிம்மதியை தருவதால்
கடலும் நீயும் ஒன்று
அலைகளை தொடர்ந்து கரைக்கு அனுப்புவது போல்
எனை தொடர்ந்து உன் மனதில் இருந்து வெளியே அனுப்புவதால்!!!