என்னை காதலால் வெல்லடி

உன்னிடம் சொல்லிட நான்
எந்த வார்த்தை கொண்டு எழுதிட
மௌனம் என்பது உனக்கு பிடித்த
தலைகனமாய் தோன்றிட

நேசத்தின் வார்த்தையை
நிலவுகொண்டு சொல்வதால்
உனக்கு புரியவில்லையே
நிலவு தூரம் என்பதால்

பாசத்தின் பற்றினை
பூக்கள் கொண்டு சொல்வதால்
உனக்கு புரியவில்லையே
பூவும் வாடும் என்பதால்


கடைசி மூச்சு கொண்டு நான்
காதலை சொல்கிறேன்
காதில் வாங்கி கொள்ளடி
கல்லறை செல்லுமுன்
என்னை காதலால் வெல்லடி

எழுதியவர் : ருத்ரன் (23-May-16, 2:29 pm)
பார்வை : 86

மேலே