வார்த்தைகள் இன்றி
ஏதேதோ பேசுகிறேன்
என்ன பேசினேன் தான்
தெரியவில்லை
உன்னை பார்த்ததும் யாவையும் மறக்கிறேன்
கண்ணோடு கண்கள் பேசிக்கொள்ள
மௌனம் மொழியாகிறது
நெஞ்சோடு நெஞ்சம் சேர
வார்த்தை பாரமாகிறது
உயிர் துடிக்கும்
ஆயிரம் பேச
அரை நிமிட தேடல்
தருவதில்லை மொழியை
கண் பேசும் மனதை
உணர்ந்து
உணர்ச்சியை
பொங்கிடுவாய்
கண்ணில்
வார்த்தைகள்
உனக்கும் ஊமை
ஆனதா!
வார்த்தைகள் இன்றி மொழிபேசிடுவோம்
ஒரு அரவணைப்பில்
ஆறுதலும்
அங்கீகாரமும்
ஆனந்தமும்
நாம் பெறுவோம்
ஓர் தொடுதலில்
உலகை நாம் வெல்வோம்
தோள் கொடுக்கையில்
வாழ்க்கையின் அர்த்தம்
விளங்கும்
வாழும் வாழ்க்கை
உனக்காக என்று
மடிசாய்கையில் உலகத்தையே மறப்போம்
~ பிரபாவதி வீரமுத்து