காதலுடன் - பாகம் 3

அவள்
கரம் பற்றி
என் பக்கம் இழுத்தேன்...
மின்னலென
வந்து விழுந்தது
நாணம்
சிவந்து மிளிர்ந்தன வதனம் ...
என்ன... அழகு! ......


ஈரிரண்டு
விழிகளும் பார்த்து
செயல் அற்றுப் போயின
இமைகள்...
இதயத்தின் தாகத்தில்
காதலை
நீராய் பருகின
கண்கள் ......


அக்னி
சிறகுகள் விரித்து
எனை
அணைத்துக் கொண்டாள்...
அவள் அங்கமோ?...
ஆழ் கடல் புதைந்த
பனிக்கட்டியாய்
குளிர் மூட்டியது......


எவரேனும்
பார்த்து விடுவார்களோ?...
பயம்
பூ மஞ்ச மனதில்
முள்ளாய் முளைக்க
ஓர் திசை காந்தமாய்
ஒட்டாது நின்றாள்......


அவ்விடம்
விட்டுப் பிரிந்த நிழல்கள்
விழாவின் நடுவில்
நடனத்தில் இணைந்தன...
பல விழிகளின் பார்வையில்
பட்டுப் புழுவாக
துடித்தாள்...
புரிந்து நானும் விலகினேன்......


பல வருடம்
புன்னகை
மறந்த என் முகத்தில்
மீண்டுவரும்
புன்னகையில்
தோற்றனத் தோட்டப் பூக்கள்......


விழா
இனிதே வீட்டில் முடிந்தது...
என்
நெஞ்சக் கூட்டில்
இதோ...
ஆரம்பமானது......
காதலுடன்......

எழுதியவர் : இதயம் விஜய் (23-May-16, 12:38 pm)
பார்வை : 94

மேலே