கல்யாணப் பரிசு

என்றும் இல்லாத அவனது நினைவு-இன்று
நதிநதியாய் பெருக்கெடுக்கிறது விழிகளில் !
வண்ண வண்ண கனவுகள் -மங்கி
வெள்ளை கருப்பு வண்ணங்கலாய் ஆனது இரவுகளில் !
வானில் பறந்த இரு ஜோடி புறாக்கள்-இன்று
வெவ்வேறு கூண்டுகளில் அகங்காரத்தின் அடிமைகளாய் !
சாதி,மத பேதமின்றி இணைந்த பறவைகள்-நாங்கள்
நீதி மன்றத்தின் குற்றவாளிகளாய் கூண்டில் !
அன்று அவனிடம் தீய குணங்களை மட்டும் கண்டதாலோ என்னவோ-அதனை
திருத்தத என் மனம் திருந்த முயற்சித்ததில்லை !
என் மனம் மனுவாய்-நீதிபதியிடம்
இனியும் அவனிடம் வாழப் பிடிக்காத போது !
கணவன்,மனைவி அர்த்தமில்லா வார்த்தைகள்
சிறிய பொய்
கை நிறைய பணம்
கிடைத்தது அவனிடமிருந்து
கல்யாணப்பரிசாய்
விவாகரத்து !!!