நானோ நொடி மழை

அறைக்குள் சிதறிக் கிடக்கும்
நிர்வாணங்களை அள்ளி
எடுத்து பூசிமுழுகும்
ஒரு காலையின்
கொடியில்
சற்று நாணத்தோடுதான்
ஏறி அமருகின்றன
ஆடைகள்...
----------------------------------------------------
ஸ்ருதியின் தாள லயத்தில்
பெருவெடிப்பின் சிறு திசைகள்
உடைந்து வழிய
சிருஷ்டியின் தீபங்களென
கடவுளின் உணருதல்
நானோ நொடிகளுக்கு...
----------------------------------------------------
உன் ஆடை மழைக்குள்
என்
அடை மழை
----------------------------------------------------
உன் ரயில் விளையாட்டில்
நிரம்பி வழிகின்றன
வீதிப் பெட்டிகள்
----------------------------------------------------
யார் தேடினாலும்
உன்னையே கண்டு பிடிப்பதாக
அமைந்து விடுகிறது
ஒளிந்து விளையாடும்
விளையாட்டு...
-----------------------------------------------------
கவிஜி