கவிதை இது கல்வி விதை

அரசில் இலக்கியங்கள் முரசொலித்த காலம் போச்சே
பரிசில் தந்து வளர்ந்த பாவலர்கள் ஞாலம் போச்சே !
புற நானுறும் அக நானுறும் புற முதுகிட்டோட
புவி மீது இலக்கியங்கள் புளங்கள் ஆச்சே !
அறவழியில் வாழ்கை என்ற அணிகலன்கள்
ஆசையெனும் ஆயுதத்தில் அழிந்தே போச்சே!
கவிதைஎன்றால் காதலுக்கும் சாதலுக்கும் படைக்கும்
காவியமாய் மாறிபோச்சே!

பாவிமகனே! பாரினை படைத்தது கவிதை அது
பாரதி வடிவத்திலே பல பாவலர் படிவத்திலே!
சாவினில் கூட ஒரு சரித்திரம் படைத்திட்ட - பல
சான்றோர் வாழ்வினையே நமக்கு சான்றிதழ் ஆக்கியதே
கவிதை என்றாலே நல்ல கல்வி விதைதானே
கருணை முகத்தோடே அதை காப்போம் சரிதானே
கவிஞனாய் நீ மாற பிறர்க்கு கவிதையாய் நீ மாறு
செவிகட்கு தேனாக சேர்த்திடுவோம் வார்த்தைகளை
புவி மீது நடக்கின்ற புரட்சிகள் எல்லாமே நல்ல
கவிமீது வித்திட்ட விடியல்களாய் புறப்படட்டும் !

எழுதியவர் : மரியா (24-May-16, 1:00 am)
பார்வை : 131

மேலே