நன்றி நன்றி நன்றி
தொடுகிறேன் தொள்ளாயிரம் நம் தளத்தில்
அடைகிறேன் ஆனந்தம் அன்பர்களே நான்
தொடர்வேன் எழுத்தில் உயிராய் உள்ளவரை
தொடுவேன் ஆயிரம் விரைவில் !
இலக்கண மறியா இடைநிலை கவிஞன்
இலக்கிய வேட்கை இதயத்தில் வழியுது
அறிந்ததை எழுதுகிறேன் கவி வடிவில்
அறிவீர் நீங்களும் அடியேனை !
நட்புகள் மலர்ந்து வாசமுடன் இணைந்தன
நெஞ்சார வாழ்த்தும் நெஞ்சங்கள் கூடின
பெற்ற விருதுகள் பெருமையை சேர்த்தன
பேரின்பம் அடைகிறேன் நானும் !
ஊர்கூடி பாராட்ட உலக சாதனையன்று
புவியே வாழ்த்திட புதுமையும் இதுவன்று
அந்நாளும் வருமென ஆவல் எனக்குண்டு
ஆன்றோர் சான்றோர் ஆசியுடன் !
பாவலர் பலரும் பாசத்தைப் பொழிந்து
கருத்தும் வழங்கி களிப்புறச் -செய்து
உயர்நிலை அடைய ஊக்கம் அளிக்கும்
உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி !
கவிதைக்கு ரசிகனாய் இருந்த என்னை
கவிதனை வடிக்கும் கவியாக மாற்றிய
காரணியு மொன்று எழுத்து தளமென்று
காலமும் மறவாதவன் நான் !
பெருகிய வாசகரால் பெருமைப் பெற்றேன்
உருகிய உள்ளத்தால் உவகை அடைகிறேன்
பழுதில்லா மனமுடன் உழுவேன் உலகினை
தொழுதிடும் முன்னோரின் உதவியுடன் !
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி !
( இது எழுத்து தளத்தில் எனது 900 வது பதிவு )
பழனி குமார்
24.05.2016