மக்கள் எல்லாம் புலிகள்

மக்கள் எல்லாம் புலிகள் என்று ,
மடியவைத்த சிங்களமே !
மாவீரர் நாள் கொண்டாடினால்
மறையாது மக்கள் போர் வெறி என்று ,
மறுக்கின்ற சிங்களமே !

துயிலும் இல்லம் சிதைத்துவிட்டால்
தூங்கிவிடும் தமிழர் மனம்
என்றெண்ணி ,
அழித்துவிட்ட அராயகமே !

நீ எண்ணிய எண்ணமெல்லாம்
ஈடேறும் என்றா போர்
வெற்றிகொண்டாட்டம்
கொண்டாடுகிறாய் !

நீயே வருடம் தோறும்
மறந்திடாதே தமிழா மறந்திடாதே
என்று ,
எரிகின்ற நெருப்பினிலே
எண்ணையை ஊற்றுகிறாய்
தமிழர் மனங்களிலே !

முழுத்தமிழனும் அழிந்தாலும்
முடியாது முள்ளி வாய்க்கால்
வேதனைகள்

உன்னால் முடியாததை
உலகநாடுகள் மூலம்
நடத்திவிட்டு,
உனக்கென்ன போர் வெற்றி!
நீ தனித்து புலிகளை வென்றிருந்தால்
நாமும் சற்று யோசித்திருப்போம்

மக்களை அழித்துவிட்டு
போர் வெற்றி வெற்றி என்று
பிதற்றுகிறாய் சிங்களமே .

எழுதியவர் : (24-May-16, 9:14 am)
பார்வை : 148

மேலே