எனக்கொரு ஆணையிட்டாள்

குளியலறைக் கதவருகில்
தின்று கொழுத்திருக்குமோ
முட்டையிடக் காத்திருக்குமோ
கண்டு விட்டாள் என் மனையாள்!

பறந்து ’மேலே விழுந்துவிடுமோ’ என்றஞ்சி
’அடித்து விடுங்கள்’ என்று எனக்கொரு
ஆணையிட்டாள்! அதுவும் அவளே!
செருப்பெடுத்துப் போட்டேன் ஒரு போடு!

வயிறு கிழிந்து மல்லாந்தது,
எனக்கோ இரக்கம் வந்தது - ஐயகோ
துடிப்பின்றி செத்தது நெடுநாள் தப்பித்த
கரப்பான் பூச்சி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-May-16, 9:35 pm)
பார்வை : 77

மேலே