மூங்கில் பூக்கள்

நீங்கள் தேரோட
அனுமதிக்காத எங்கள்
தெருவில்தான்
மழை வெள்ளத்தில்
மிதந்து வந்தது உங்களிள்
யாரோ ஒருவரின் பிணமும்.

!!!!!!!!!!!!!!!!!

தலைகீழாகத் தொங்கும்
தன் உடலயே பார்த்துக்
கொண்டிருக்கிறது
ஆயிரம் ஈக்களுடன்
கூடிய ஒரு ஆட்டின் தலை.

!!!!!!!!!!!!!!!!!

ஒரு மூங்கில்
காட்டையே முதுகில்
சுமந்து போவதாய்
நினைக்கிறான்
விற்காத புல்லாங்குழலோடு
வீடு திரும்புகிறவன்.

!!!!!!!!!!!!!!!!!!!!

கூரையின்
வழியாக வரும்
ஒளிநூலைப்பிடித்தபின்
சூரியன் பட்டமாகிறது
ஏழைச்சிறுமியின்
கைகளில்

-நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (24-May-16, 6:46 am)
Tanglish : moonkil pookal
பார்வை : 174

மேலே