பெண்ணினம் காப்போம் - கற்குவேல் பா

நீங்கள்
அக்குள் வாசனை நுகர்வதை,
வழக்கமாக கொண்டிருந்தீர்கள் ..
கழிப்பறை மேட்டில் அமர்ந்து,
மலத்தை ரசித்தபடியே
உணவையும் உட்கொண்டிருந்தீர்கள் ..
பொழுது சாய்ந்த வேளையில்,
கூவ நதிக்கரை புதர் இடுக்குகளில்,
உடல் விற்கும் ஒருத்தியின்
அந்தரங்களை ருசித்தபடி - இருளில்
மண்டியிட்டுக் கிடந்தீர்கள் ..
பின்,
கார்பொரேட் சாமியார்களாக
உங்களை உருமாற்றிக் கொண்டு,
பிள்ளை வரம் தருவதாக - கணக்கில்லாமல்
தாறு மாறாக கற்பழித்தீர்கள் ..
பதிமூன்று வயதைத் தொட்டிராத,
மன வளர்ச்சியற்ற
சிறுமியைக்கூட விட்டுவைக்காமல் ,
தண்டவாளம் ஓரம் அழைத்துச் சென்று ,
காமவெறியை தணித்துக் கொண்டீர்கள் ..
ஜனநாயக சிம்மாசனத்தில்,
சுதந்திரப் போர்வை இருள் - உங்களைக்
காத்துக் கொண்டிருக்கும்வரை,
ஓடிக் கொண்டே இருங்கள் .. !

#பதிமூன்று_வயது_சிறுமி_கற்பழிப்பு_டெல்லி
#நூறு_பெண்கள்_கற்பழிப்பு_பரமானந்த்

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (27-May-16, 11:37 am)
பார்வை : 114

மேலே