காதல் அன்னக்கிழத்தி_ குமரேசன் கிருஷ்ணன்
அல்லிருளில்
உயிர்ப்புலன்களின்
திடுக்கிட்ட விழித்தலில்
கிழக்கு நோக்கிப் பறந்தது
என்மனப்பறவை...
சிறுதாமரை மலரின்
பிரிவாற்றாமையைக்கூட
கண்டிராத என்காதல்
அன்னக்கிழத்தியின்
மனப்பறவை
மேற்கு நோக்கி நகர்ந்து
என்மனதையெழுப்பியதோ...?
விடுமுறைக் களியாட்டத்தின்
கிறக்கத்தில் துயில்கின்ற
நம்குழந்தையின்
முடிகோரியபடி நீயும்
உன்மூக்குத்திச் சாயலில் ஜொலிக்கும்
நட்சத்திரங்கள் எண்ணியபடி
நானும்
ச்சே..
இந்த இரவிலும்
இக்கோடையேன்
இப்படித் தகிக்கிறது....?
----------------------------------------------------
-- குமரேசன் கிருஷ்ணன் --