கூழும் எலிப்புழுக்கைகளும் ஜென்
ஒரு மூத்த துறவி கோடைக் காலம் முழுவதும் போதனை செய்யவில்லை.
கோடைக் காலம் இப்படியே கழிந்து விட்டது. இனியும் போதனையை எதிர்ப்பார்க்க முடியாது.
நேரடிக் காரணம் பற்றியாவது இரண்டு வார்த்தைச் சொல்லுங்கள்.
என்னிடம் அதிகம் எதிர்ப்பார்க்காதீர்.
‘ நேரடிக் காரணம் ‘ குறித்துப் பேச இயலாது.
பிறகு அப்படி சொன்னதற்கு வருந்தினார்.
ஏன் அப்படிச் சோன்னேன்? பிரச்சினையை நானே தேடுகிறேன்.
அடுத்த அறையிலிருந்த இன்னொரு மூத்த துறவி அதைக் கேட்டுச் சிரித்தார்.
சுவையான கூழுள்ள பானையில் எலிப்புழுக்கைகள் விழுந்து விட்டன.
கருத்து:
தேவையற்ற வார்த்தைக்கள், கூழில் விழும் எலிப் புழுக்கள் போன்றவை.
ஆதாரம் ; ஜென் வெளிச்சம் – நூல் – பக்கம் – 133.
தகவல் ; ந.க.துறைவன்.
*