தாய்மையிடத்து காதல்
காதலி சமைக்கும் போது வெந்நீரைக் கூட தேநீர் என்போம்... அம்மா செய்த மிளகு ரசம் கசாயம் என்போம்...காதலி போட்டுவிடும் ரிஸ்ட் பேண்ட் ஸ்டைல் என்போம்...அம்மா கட்டிவிடும் கயிறு பழம் என்போம்...
காதலியின் பேசினால் கூட குயில் என்போம்... அன்னை பாடும் பக்திபாட்டும் இரைச்சல் என்போம்...
காதலி வர சொன்னால் பத்து கி.மீ நடப்போம்... அம்மா கடைக்கு போகச்சொன்னால் இரண்டடி என்றாலும் மறுப்போம்...
காதலியிடம் ஒரு மணி வரை பேசுவோம்....
அம்மாவிடம் அரை நிமிடம் ஒதுக்க மாட்டோம்...
இப்படி அவள் தவங்கிடந்த பெற்ற உன்னை இவள் தரமுயர்த்தி விடுவாளோ!!!!