தாய்மை

என் செல்லமே...

உன்னை பெற்ற பொழுதில்
என் வெட்கம் துறந்ததென்னவோ..
அந்த கதைதான் நான் சொல்லவோ..

இதுவரை நான் காத்த பெண்மை தொலைந்த கதை
என் தாய்மையை நான் உணர்ந்த கதை ...

கண்ணே!!!!!

மழலை பூத்த மொட்டாய் மலர்ந்தேன் !
பசுந்தமிழ் கற்றே பதுமையாய் மிளிர்ந்தேன் !
நாளும் பொழுதும் வான்மேகமாய் தவழ்ந்தேன் !
கன்னித்தமிழால் பருவம் தொட்டு பாவையானேன்...

மணியே!!!

நாணமும் நளினமும் ததும்ப ததும்ப
பெண்மையின் வாசம் கொண்டு
சொக்கியே நான் நின்றேன் !

முத்தே !!!!

யெவரும்யெவரும் கானா வண்ணம்
ஆடையை சரிசெய்தே அயர்ந்த கைகளுண்டு !

மாணிக்கமே !!!

தென்றல் காற்றால் சேலை விலகக்கண்டு
பதறியே பற்றிய காலமுண்டு !

என் தங்கமே !!!

சுற்றும் முற்றும் பார்த்து பார்த்து
அருவியில் குளித்த கதையுண்டு !

வைரமே !!!

கணவர் கரம் பட்டதும் என் பெண்மை
உடைந்து ஒடிந்த தருனமுண்டு !

இன்று...

பலரும் பயணிக்கும் நெடுந்தூர
ரயில் பயணத்தில் பசியால் நீ
அழுதவுடன் பதை பதைத்து என்
மார்திரை விளக்கி உனக்கு
அமுதூட்டிய அழகிய தருணமது !!

பசியாறி உன் பொக்கைவாயால்
சிரித்த பின்புதான்
அருகில் அயலார் அனைவரும் அமர்ந்திருந்ததை அறிந்தேன்.

''இதுவல்லவோ தாய்மை''

எங்கே போனது என் வெட்கம் !
எங்கே போனது என் பெண்மை !
எங்கே போனது என் இளமை !
எங்கே போனது என் கூச்சம் !

---- தாய்மைக்கு பேதமில்லை -----

*****ஒவ்வொரு ' தாயுக்கும் ' எனது
"தாய்மை " கவியை சமர்ப்பணம் செய்கிறேன்.... ******

எழுதியவர் : கிருத்திகா (25-May-16, 9:39 pm)
Tanglish : thaimai
பார்வை : 292

மேலே