அம்மா, அம்மா,

அம்மா என்ற ஓர் உச்சரிப்பில்
என் பசியின் அளவை நீ அறிந்திருப்பாய்
சோதனைகள் பலவந்தாலும் அதை
சாதனைகளாக மாற்ற கற்றுக் கொடுத்திருப்பாய்
கவியரசு பெற்ற மகள் நான் என்று
என்றோ எனக்கு உணர்த்திருப்பாய்
காலத்தால் ஆற்றாத காயத்தை
நீ விடும் ஓர் முச்சில் ஆற்றிருப்பாய்
உளியாக நீ இருந்து என் விடியலுக்கு
ஓளி கொடுத்திருப்பாய்
கண் இமைக்கும் நேரத்தை கூட
கணக்கிட்டு காத்திருப்பாய்
என்னை செதுக்கிய சிற்பியே நீ தான்
என்று நானும் உன்னை தொகுத்திருப்பேன்
உன்னை ஒருமுறையேனும் அம்மா-னு... அழைத்திருந்தால்