காதல் என்பது - 9

பயம் என்ற சொல்
நம்மை ஒரே அடியாய்
உலுக்கி விடும்

அதிலிருந்து மீண்டு
வர வேண்டும்

அதற்க்கு துணிவு நிச்சயம்
தேவை

காதல் என்ற சொல்லுக்கு
தடை இருக்கக் கூடாது

தன் காதலை வீட்டில்
தெரியப் படுத்த
நினைத்த பொழுதுதான்

சிக்கல்கள் எவையெவை
என தெரிய வந்தன

முதலில் வந்தது
ஜாதிப் பிரச்சனை

பின் வந்தது
தன் மானப் பிரச்சனை

என்ன செய்வது என
நினைத்தது மனம்

சொல்லித்தான் பார்ப்போமே
என்றது அறிவு

மெதுவாக வாய் மலர்ந்தாள்
அழகாக தன் காதலை சொன்னாள்

பதறியது தாயின் மனம்
சலனமில்லாமல் இருந்தது
தந்தையின் உள்ளம்

தந்தையின் கேள்விகளுக்கு
நிதானமாய் பதில் சொன்னாள்

தாயின் கோபச் சொற்களுக்கு
குளிர்ச்சியாய் பதில் தந்தாள்

முடிவாக தந்தை கேட்டார்

உன் எதிர்கால வாழ்கையை
தீர்மானிக்கும் தகுதி

எங்களுக்கு உண்டா இல்லையா

கண்டிப்பாக உங்களுக்கு
உண்டு

என் மனம் கோணாமல்
இருந்தாள்

எங்கள் மனம் நொந்து
போனால்

பரவாயில்லையா என்றார்

யார் மனமும் நோகாமல்

ஓர் முடிவை எடுப்போமே என்றாள்

இருப்பது நாம் மூவர்

சந்தோஷமாக பயணிக்கும்
இந்த வாழ்வில்

அவனையும் இணைத்துக் கொள்ளலாமே
என்று சொல்லி

அவனைப் பற்றி

ஆதி முதல் அந்தம் வரை
விவரித்தாள்

தாயின் மனமோ
சோகப்பட்டது

துணிச்சல் வேண்டும்

அதீத துணிச்சல் ஆபத்தானது
என்று தோன்றியது

ஆதரவாய் மகளை அணைத்து
அன்போடு எடுத்துச் சொன்னாள்

மகளின் இளம் பருவம்

ஆர்ப்பரிக்கும்,
ஆனந்தக் கூத்தாடும்

காதல் எனும் அமுதத்தைக்
குடித்தால்

தாயின் அனுபவம் பெற்ற
பருவம் பதறும்

ஏதோ ஒரு வலையில் சிக்கி
திசை மாறி, தன் மகள்
போகிறாளே என்று...

தாய் மனம் நோகாமல்
பதிலும் தந்தாள்

உங்கள் பயத்திற்கு என்ன
காரணம் என்றாள்

அவனின்....

ஜாதியா...
படிப்பா...
குடும்ப பழக்க வழக்கமா....
அங்கிருக்கும் நம் கண்களுக்கு
தெரியா சூழலா.....

என்று அடுக்கிக்கொண்டே
போனாள்

எங்களுக்குள் புரிதல் உண்டு

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
உண்டு

எதற்கும் கவலை வேண்டாம்

என தெள்ளத் தெளிவாக சொன்னாள்

தாயும் பதிலளித்தால் .....

புரிதலும் விட்டுக் கொடுத்தாலும்
இருவகைப் பலன்களைத் தரும்

ஆனந்த வாழ்வையும் தரும்
அலங்கோல வாழ்வையும் தரும்

அதனால் தான் இந்த பயம்
புரிந்து கொள் மகளே என்றாள்

தன் கணவனைப் பார்த்தாள்

அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது

அவன் வீட்டில் உங்கள் காதலை
ஏற்றுக் கொண்டு விட்டார்களா
என்று வினவினார் தந்தை

அங்கும் இப்படித்தான் விவாதம்
நடந்து கொண்டு இருக்கும் என்றாள்

அவனும் வந்து உங்களிடம்
பேசுவான்...

நீங்கள் அனுமதித்தால் என்றாள்

இந்த விஷயத்திற்கு
முடிவு எப்படி இருக்கும்

துணிச்சலான மகள்
அக்கறைக் காட்டும் தாய்
இவை இரண்டும் கலந்த
உள்ளம் கொண்ட தந்தை

நல்ல முடிவை எதிர்பார்த்து
காத்திருப்போம்

(தொடரும்)

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (31-May-16, 3:30 pm)
பார்வை : 60

மேலே