வார்த்தை

உன்னில் விழுந்தேன்
என்னில் விழும்தேன்
**************************
அடி கடி எனை அடிக்கடி
***************************
உன் கை
என் மீது
பட்டா போதும்
பட்டா வேண்டாம்
******************************
உன் மன பையில்
எனை தை தையில்
*******************************
அஞ்சுகம் உன்னால் அஞ்சுயுகம்
நகர்ந்ததடி
**********************************
தலையணையே
என் தலை அணை
************************************
கணினி நீ
கனி நீ..
**************
மதுமதி
மது மதி இழக்க வைக்கும்(செய்யும்)
******************************************
பூகோளம் உன்னாலே
பூக்கோலம் ஆகும்
(பூகோளம் நீ
பூக்கோலம் நீ)
****************************
எனை கொள்ளடி
இல்லை கொல்லடி
பதில் சொல்லடி
என் கண்மணி
***பிரபாவதி வீரமுத்து