புன்னகை சிந்தும் பூக்கள்

புன்னகை சிந்தும் பூவே - நீ
எந்த சோலையில் பூத்த பூவை
இளம் தேனீக்கு தினம்
நீதானே தேவை !

காதலின் பிறப்பிடம் கண்கள்தான் - எனினும்
அவை வளருமிடம் இதயமல்லவா
ஈர இதயமல்லவா...

கவிதையின் பிறப்பிடம் அழகுதான் -எனினும்
அவை வளருமிடம் கற்பனையல்லவா
கனவு கற்பனையல்ல வா!

காதல் என்பது
கண்களை விட்டுப் பிரிந்து செல்லும்
கண்ணீர் ஆகுமோ ? இல்லை
கண்ணின் கருமணியை பாதுகாக்கும்
இமைகள் ஆகுமோ ?

வாய் வார்த்தைகள்தான்
பிரசினைகளை உருவாக்குமே
மெளனம்தான் அதற்கு மருந்தாகுமே
மா மருந்தாகுமே !

எழுதியவர் : கிச்சாபாரதி (31-May-16, 10:56 pm)
பார்வை : 110

மேலே