தொடர் முயற்சி
கடல் அலை ஓய்வதும் இல்லை
எல்லா அலைகளும்
கரைக்கு வந்து சேர்வதுமில்லை
எனினும் அது
தன் முயற்சியை நிறுத்தவில்லை!
ஓசை எழுப்பாத கடல்கள் இல்லை
ஆசை இல்லா மனிதன் இல்லை
ஒரு சிலரது பேராசைக்கோ
ஏது எல்லை ?
வெற்றியும் தோல்வியும்
வெகு தூரமில்லை
முயற்சி மேல் முயற்சி செய்தால்
நீயும் தொடுவாய் நினைத்த எல்லை !
மக்கள் ஆசைபடக் கூடாதென்று
புத்தர் ஆசைபட்டார்!