சந்தக்குழிப்பு
எட்டுத்திசை மெச்சத் தமிழினை
கட்டுக்குள டக்கித் தெளிவுற
இட்டுச்செலு மக்கட் பணிகளு மழகாக
வித்தைக்கென வட்டத் தினையிணை
வித்துக்கவி கற்றுப் பழகிட
வித்திட்டவ ருக்குத் தருவது மரியாதை
ஒப்பற்றது வெற்றிக் கிடமிது
செப்புச்சிலை யொப்பத் திறமிது
தெப்பக்குள மொப்பக் களிநட மிடுசோலை
அச்சத்தினை விட்டுப் பயிலுக
நச்சுக்களை வெட்டிக் களையெடு
உச்சத்தினை யெட்டித் தொடுவது மொருநாளே !