சுடுகாட்டில் வாழும் பேய்

ஒரு இரவு நேரம்! சரியாய் 12 மணி. நாயின் குரைப்பு கூட பேயின் உளறல்போல் கேட்டுக்கொண்டிருந்தது ஓவர்டைம் பார்த்துவிட்டு வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தான். அவன் வீட்டுக்குச் செல்ல ஒரு சுடுகாட்டைத் தாண்டித்தான் போக வேண்டும்! அது ஆள் அரவமில்லாத தனியான ஒரு சுடுகாடு!

சுடுகாட்டை அடைந்துவிட்டான்!

திடீரென மிகப்பெரிய உருவத்துடன் பேய் ஒன்று கண்முன் தோன்றியது, பெரும் சப்தத்துடன் "ஹா ஹா ஹா! நான் யார் தெரியுமா?" என்று கூறிக்கொண்டே அவனின் அருகில் வந்தது.

“யார் நீ?”

“நான்தான் இந்த சுடுகாட்டில் வாழும் பேய்!”

“நான் எப்படி நம்புவது?”

“என்னைப் பார்த்தால் உனக்கு பயமாய் இல்லை?” என்றது பேய்

“நிச்சயமாக இல்லை."

பேய் குழம்பிப்போய்விட்டது, “ஆமாம்! என்னைப்பார்த்தால் ஏன் உனக்கு பயமில்லை?”

"கடந்த பத்து வருசமா உன் தங்கையுடன்தான் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறேன்."

எழுதியவர் : செல்வமணி (31-May-16, 11:36 pm)
பார்வை : 189

சிறந்த நகைச்சுவைகள்

மேலே