நெனச்சு கூட பார்க்கலைல
காலை வெயில் வாட்டி எடுக்க எழுந்ததும் ராம் எங்கோ செல்ல புறப்பட்டு கொண்டு இருந்தான்.'எங்கடா அவசரமா போர?',என்று அவனது அம்மா கேட்க இன்னைக்கு ஸ்கூல் லீவ்...அதான் விளையாட பொய் கொண்டு இருக்கேன் என்றான்.
கண்ணா ஜாக்ரதையாய் விளையாடு.மறந்தும் ரோட்டு பக்கம் போக கூடாது என்று செல்லமாய் அதட்ட சரிம்மா என்று சொல்லியபடி வெளியே சென்றான்.அப்பா போய் விளையாடிட்டு வர்றேன் என்றான்.பார்த்து போயிட்டு வா என்று அவர் பதில் அளித்தார்.
ராம் முதலில் தன் நண்பன் முருகன் வீட்டிற்கு சென்றான்.முருகா!!டேய்!!வாடா என்று கத்த ஒருவன் எழுந்து வந்து இரண்டு நிமிஷம்
என்றான்.இருவரும் மைதானம் நோக்கி சென்றனர்.அங்கு அவர்களது நண்பர்கள் அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.ஏன்டா லேட்டு?சரி டீம்
போடுங்க என்றதும் இரண்டு அணிகள் உருவாக்க பட்டது.ஒரு அணி போலீசாகவும் மற்றொரு அணி திருடர்களாகவும் பிரிக்கப்பட்டு ஆட்டம்
துடங்கியது.
போலீஸ் அனைவரும் திருடர்களை பிடிக்க வேண்டும் அவ்வளவுதான்.ஆட்டம் துடங்கியது.இவர்கள் விளையாடுவதை வெயில் சிரித்தபடி ரசித்து கொண்டிருந்தது.
மாலை ஆறு மணி.அனைவரும் புறப்பட தயாராயினர்.ச்ச்ச!!!!!!நாளைக்கு திரும்பியும் ஸ்கூல்!!!!!!!என்னடா முருகா வாழ்க்கை இது என்றான்
ராம்.அதற்கு முருகா"டேய் மச்சி!!வயசானதுகப்புறம் பசங்க குடிக்கிறதையும் வயசாகுறவரைக்கும் நாம படிக்குரதையும் யாராலையும் தடுக்க
முடியாது",என்று அவன் வசனம் பேச இருவரும் அவர்களது வீட்டிற்கு சென்று கொண்டிருக்க டேய் முருகா அம்மா எப்ப பாரு ரோட்டுக்கு போகதன்னு
சொல்லிகிட்டே இருக்காங்க அப்படி ரோட்டுல என்னதாண்ட இருக்கு என்று கேட்டான் ராம்.பொய் பார்ப்போமா?என்றான் முருகன்.எவ்வளவோ
பண்ணிட்டோம் இதையும் பண்ணிதான் பார்ப்போமே?என்று கூறியபடி இருவரும் ரோடு இருக்கும் திசை நோக்கி நடந்தனர்.
இருவரும் பேசி கொண்டே நடக்க திடீரென்று ஒரு வெளிச்சம்.ஏதோ ஒன்று அவர்களை நோக்கி வேகமாய் வந்து கொண்டிருந்தது.அது அவர்களை
நோக்கி வரவர இருவரும் பயத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர்.சட்டென்று அது அவர்கள் முன் வந்து நின்றது.உள்ளிருந்து"பார்க் ஸ்டாப்
இறங்குரவங்க இறங்கிக்கோங்க"என்ற சத்தம் கேட்டது.டேய் பஸ்சுடா என்றான் ராம் இருவரும் பஸ்சிற்கு வழிவிட அந்த பஸ் அவர்களை கடந்து
சென்றது இவர்களும் அந்த பஸ்சிற்கு கையசைத்த வண்ணம் இருந்தனர்.பஸ் சென்றவுடன் இருவரும் நடக்க தொடங்கினர்.
திடீரென்று"டேய் ராம் அங்க பாருடா"என்றான் முருகன்.கண் முன் ஒரு சிறிய கடை.அதன் பெயர்"சுவை இனிப்பகம்".கண்ணாடி பெட்டியில்
ஜாங்கிரி,லட்டு அனைத்தும் அழகாய் அடுக்கபட்டிருந்தது.அதை பார்த்ததும் இவர்களின் வாயில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்ட தொடங்கியது.
கடையின் அருகே சென்றனர்."டேய் கஸ்டமர் வர நேரம் இவங்கள அடிச்சு துரத்து",என்றான் ஒருவன்.இதை கேட்டதும் இருவரும் சட்டென்று
இடத்தை விட்டு நகன்றனர்........
ராம் வீட்டில் சோகமாக உட்கார்ந்திருக்க டேய் கண்ணா என்னடா ஆச்சு என்று அவனது அம்மா கேட்க நடந்ததை எல்லாம் அவன்
கூறினான்.எதற்கம்மா என்னை அடிக்கணும்?.நான் இனிப்பு மேல் கை கூட வேக்குல என்றான்.என்னங்க நம்ம பையன எவனோ அடிப்பேன்னு
சொல்லிருக்கான்.என்னன்னு கேட்டுட்டுவாங்க என்றாள்.தந்தையும் மகனும் புறப்பட்டனர்.
அந்த கடையை அவன் காட்ட இருவரும் அதன் அருகே சென்றனர்.
"வாங்க!!!!!!! வாங்க!!!!!!!! ஸ்வீட்,காரம் எல்லாம் இருக்கு என்ன வேணும் என்று
கேட்டான்.
அப்பா உங்கள பாத்ததும் பயந்துட்டான் என்றான் ராம்.எனக்கும் என் மகனுக்கும் இரண்டு லட்டு கொடு என்றான்.டேய் சாருக்கு லட்டு எடு என்று கடை
காரன் சொல்ல லட்டு அவர்கள் முன் வந்தது.இருவரும் தங்களது வாயினை லட்டினில் பதித்தனர்.லட்டின் சுவை அவர்களை மெய் மறக்க செய்தது.
திடீரென்று அவர்களது காதில் கேட்டது"அப்பா கடையில இருந்து வாங்கிட்டு வந்த லட்டுல இரண்டு எறும்பு இருக்கு"என்றதுதான்.இருவரும் அழகாக
வெளியில் வந்து அந்த சிறுவனை பார்த்து புன்னகை செய்த படி இரு லட்டு துகள்களை எடுத்து கொண்டு அச்சிறுவனை பார்த்து கையசைத்துவிட்டு
மெதுவாய் நகர்ந்தன."அய்யா!!!!!!!எறும்பு கையசைக்குது!!!!!!!!"என்று சிரித்த படி அச்சிறுவனும் கை அசைத்தான்.
ஆம்!ராம்,முருகா இருவரும் எறும்புகள் நெனச்சு கூட பார்க்கலைல ஹி! !ஹி! !ஹி! !
புன்னகையுடன் உங்கள்
ர.மனோஜ் குமார்
[இக்கதையினை படிப்பவர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்யவும்]
நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!