நான் வலி
என்னை காணாத ஆள் இல்லை...
எனை காணாது நாள் இல்லை...
நான் இல்லாது மனம் இல்லை...
நான் செல்லாத குணம் இல்லை...
ஓடும் கால்களில் நான் இருப்பேன்...
நாடா புழுவென மறைந்திருப்பேன்...
காதல் இதயமதை தினம் குடிப்பேன்...
நாளும் எனை எண்ணி நீ அழுவாய்...
நான் வரகூடாதென்று தினம் தொழுவாய்...
சீக்கிரம் ஆற்றிவிட வேண்டும் என்பாய்...
ஆறாமல் நான் இருப்பேன் காதல் அன்பாய்...
எனை மறக்க மது என்பார் மாது என்பார்... எது வந்தாலும் தீமை உன்பால்!!!!
நான் தான் வலி!!! நான் மட்டுமே வழி!!!