வர்ணிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
ஒற்றை வரிகளில் சொல்லிட முடியாது அவளது அழகை .......
ஒன்பது கோள்களும் சுற்றிப் பார்த்து விட்டேன் ......இல்லையடி உன் (இது ) போல் ஒரு அழகு ....
வெண்ணிலாவும் வானில் வந்து பிறைமுகம் காட்டிச் செல்வது ...
உன் பிறைமுகம் காணதானோ......
என் வீடடு பூக்களும் பூப்பதற்கு தாமதம் கொள்கிறது ... உன்
புன்னகையை பார்த்து விட்டுத்தான் பூப்பேன் என்று ....
அவ்வளவு அழகடி உன் புன்னகை ......
உன் ஒற்றை கண் பார்வையிலே .....என் ஓர் உயிர் வாங்கிச் சென்றவளோ
உயிரை திரும்பத் தந்திடும் எண்ணம் உண்டோ ?..
உன் கவி படித்துத்தான் கவி எழுதவோ ஆரம்பித்தேன் . உனக்கு நினைவுண்டோ?
என் கவியோ ...
வரியும் வலியும் நீ தந்தாய் ..........
ஒன்றை ஏற்று கவி பயணம் மேற்கொண்டு இருக்கிறேன் .
மற்றொன்று நினைவோடு வந்து செல்கிறது சுகமானதாக அவ்வபோது .....
--------------------------------------------------------- * ********* -----------------------------------------------