மனிதாபிமானம்

பச்சைகொடி
காட்டுகிறது
உயிர்
சிவப்பு கொடியில்
*********************
உலகம் அனைத்தும்
ஒன்றாகும்
ஓர் சொல்லில்
#ஹலோ
***********************
பகவத்கீதை
குரான்
பைபிள்
எல்லாம்
புனிதநூல்கள் தானே?
***************************
இலை உதிர்ந்தால்(மரித்தால்) இலையுதிர் காலம்
மரம் உதிர்ந்தால்?????
****************************
சாகபோகிறது என்று
தெரிந்தும் நீர்
வார்க்கிறான்
???????
மனிதன்
******எது என்று சொல்லவில்லை .
கடைசி (அது மட்டுமல்ல)ஒன்று எனக்கு இதுவரை மூன்று வித்தியாசமான பொருளை தந்துள்ளது.
கவிதை பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் வேவ்வேறு பொருளை தரும் .
அதன் எல்லைக்கோடை நான் ஏன் சுருக்க வேண்டும் என்று தான் கூறவில்லை...
மேலும் கவிதை என்பது வாசகனையும் சிந்திக்க வைக்க வேண்டும்.
இப்படியாக இருக்குமோ
இல்லை வேறு எப்படியாக இருக்கும்.
நாளை அவனும் கவிஞனாக வேண்டுமல்லவா!
கவிதை எளிமையானது
கவிதை கடினமானது
கவிதை உண்மையானது
கவிதை கற்பனையானது
நாம் பார்க்கும் எல்லாமே கவிதை
எதிலும் கவிதை வாழ்கிறது
கவிதையில் நாம் வாழ்கிறோம் *****
~ பிரபாவதி வீரமுத்து