என் தந்தை

அ என்று சொல்லியவன் அப்பா
ஆ என்றால் உ என்பவள் அம்மா


நான் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுது
என் தந்தையின்
நெஞ்சில் உறங்குவேன்
அம்மா கீழே இறங்கி படு
அப்பாவுக்கு வலிக்கும் என்பாள்
அப்பா
பரவாயில்லை
குழந்தை தூங்கட்டும்
என்று தூங்கவைப்பார்
நான் அப்பாவின் இதயதுடிப்பை கேட்டுகொண்டே உறங்கிடுவேன்

ஓர் ஆண் எப்படி பட்டவனாக இருக்க வேண்டும் என்பதை தெளிவு செய்தவர்
என் தந்தை

உழைத்து வாழவேண்டும்
உண்மையாக இருக்கவேண்டும்
கோபம் வந்தால் அதை அப்பொழுதே வெளிக்காட்டிட வேண்டும்
பின்பு நகைச்சுவை செய்திட வேண்டும்

ஊரில் பெரிய மனிதனாய் இருந்தாலும்
வீட்டில் உள்ளவர்களுக்காக
கீழ் இறங்கி வேலை செய்ய வேண்டும்

அப்பா நிறைய நீதி கதைகள் கூறுவார்
இன்றும் அறிவு தந்து வழிநடத்துவார்

என் தந்தை என்று நான் பெருமையாக சொல்லிக்கொள்வது போல்
என் மகள் என்று என் தந்தை
சொல்லிக்கொள்ளும் நாளுக்காக காத்திருக்கிறேன்.


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jun-16, 10:25 am)
Tanglish : en thanthai
பார்வை : 831

மேலே