தோழியே

விட்டு விட்டு முகம் காட்டும்
முழுமதியும் நீதானோ...
பட்டு மெத்தை மீதுணரும்
சுகந்தமது நீதானோ...
தொட்டு தொட்டு எனைத் தீண்டும்
இளங் காற்றும் நீதானோ...
என் கனவோடு பூத்து நிற்கும்
புன்னகையும் நீதானோ...

இனியவளே உனக்காக
நானெதற்கு கவி படைக்க!
உனக்கான கவி படைக்க
நான் கம்பனாக பிறக்கவில்லை...
***

-முஹம்மது பர்ஸான்.

எழுதியவர் : முஹம்மது பர்ஸான் (5-Jun-16, 10:52 am)
பார்வை : 370

மேலே