வறுமை கொடிது

அதிகாலை எழும் முன்னே
எழுந்து பறந்தன பட்ஷிகள் யாவும்
தன் இருப்பிடத்தை விட்டு விட்டு
அதற்கு தேவையான உணவைத்தேடி

நானும் விழித்தெழுந்து
கிழிந்திருக்கும் கோரைப்பாயை
பத்திரமாய் ஒரு ஓரத்தில் எடுத்து மடித்து வைத்துவிட்டு
அழுக்கு நிறைந்த என் சட்டையை தூக்கி மாட்டியபோது
ஓட்டை பையிலிருந்து சில்லரைக் காசுகள் சிதறி ஓடின
அவற்றையெல்லாம் தேடி பிடித்து
ஒருவழியாய் பிறக்கி எடுத்துக் கொண்டு
அங்காடி தெருவுக்கு சென்றேன்

தேனீர் குடிக்க ஆசைதான் எனக்கு
வசதியில்லாத்தால் அந்த பழக்கத்தை பழகிக்கவில்லை
அதற்காக சாப்பிடாமல் இருக்க முடியுமா?

இருக்கும் பைசாவிற்கு நான்கு இட்லி கூட கிடைக்காது
இரண்டு இட்லியே அதிகம்தான் என் வயிற்றுக்கு
தினமும் இருவேளை பட்டினியாய் இருந்து பழகியவனுக்கு
வயிறு சிறுத்துப் போச்சு எனினிம் பசி வராமலா இருக்கும்?

ஒரு நாளுக்கு இரண்டு நேரம்
இந்த பரதேசி வயிறு காலியாகத்தான் கிடக்கும்
ஆனாலும், அந்த உதயம் தொடரும்
காலை மதியம் இரவென்று - தினம்
சுழன்று கொண்டுதான் இருக்கு
என்ன செய்வது விலைவாசி கூடிப்போச்சு
அதெல்லாம் தெரியுமா வயிறுக்கு

உறவினர்கள் ஆயிரம் உண்டு
என்மீது அவர்களுக்கு உடன்பாடுதான் இல்லை
காரணம் இன்று என்னிடம் பணமில்லை
அவர்களுக்கு தேவையெல்லாம்
இல்லை இல்லை...
இந்த உலகமே பணத்தின் பின்னால் ஓடும் போதுஓடும்
யார் மீது குறை சொல்வது
இல்லாதவனாய் நான் இருக்கும் போது
கிடைத்ததை வைத்துதான் என் பிழைப்பும் ஓடுது

ஈர நெஞ்சம் கொண்ட
கருணை குணம் நிறைந்த
அன்பர்களும் நண்பர்களும் இருக்கும் வரையில்
காட்டு தீயில் விழுந்து கருகாமல் இறப்பேன்
அடுத்த பிறப்பொன்று இருந்தால்
வயிறொன்று இல்லாமல்
வறுமை இல்லாத நாட்டினில்
பிறந்து நான் வாழவே ஆசைப்படுகிறேன்

எழுதியவர் : கிச்சாபாரதி (5-Jun-16, 1:29 pm)
பார்வை : 60

மேலே