காந்தக் கண்
இரும்பை ஈர்க்கும் காந்தமாய்
என் இதயத்தை ஈர்க்கும் கண்ணே
உன்னிரு விழியாலே தினமும்
என்னை அழைப்பது எதற்கடி பெண்ணே!
உன் கருவிழிகள் ரெண்டும்
எனக்கு இன்பம் தருவன என்றாலும்
என்னை துன்புறுத்துதே
உன் இதழ்"கள்"தான்
தினம் திரும்பிப்பார்க்கச் செய்யும்
புனையா ஓவியமே
நீ எனக்கு இல்லையென்றால்
இன்னல் உனக்குதான்
உறங்கும் போது என்னிமைக்குள் நுழைந்து
தினம் செய்வதேன் தொல்லை
தூயவள் முகத்தை என் மன வானில்
உலா வருவதை நினைத்து
தன்னை நானும் மறந்து கிடப்பேனே!
எந்த நாளும் வரவேண்டும் என் கண்முன்னே