4-6-16தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை - 58 = 125
“நடனம் நடைபெறும் அரங்கம்
கரவொளி விண்ணை பிளந்தும்
சிறு சலனமில்லாமல் ரதியவள்
சிறகை விரிக்கிறாள் மின்னொளியில்..!”
இருவிழி சுழற்றி பலவிழி நோக்கினாள்
பலர்பக்கம் பார்த்து பார்வையை திருப்பினாள்
வில்லாய் வளைந்து சாகசம் நிகழ்த்தினாள்
விடலைகள் யாவரையும் மயக்கி அசத்தினாள்
அவள் ஆடுகின்ற ஆட்டம்
அனைவரின் இன்ப நாட்டம்
மேகம்போல் மக்கள் கூட்டம்
அலைமோதி மனமார ஆர்பறிக்குதே..!
என் நெஞ்சினில் எழுகிறாள்
மென் பஞ்சினில் துகில்கிறாள்
வெண் சங்கினை முழங்கினாள்
கண்ணில் சரசங்கள் பயில்கிறாள்
வஞ்சிமகளின் ஆதாம் நான்
தொழுகிறேன் அவள் பாதம் தான்
நெஞ்சிருக்கும்வரை என் நெஞ்சில்தான்
அந்த வஞ்சிமகளின் வசியம்தான்
இதுவரை காணாத ஆட்டம்
அரங்கம் கொள்ளாத கூட்டம்
அனைவரின் முழு கவனமும்
அவள் ஆட்டத்தோடு அய்க்கியம்
ஆனது – அவள் நடனமானது
தேவலோக தேவியருக்கு ஈடானது..!