இறவாப் புகழ்

விண்னிலிருந்து நமக்காய் வீழும் அருவியும்
மண்ணிலிருந்து பாயும் ஊற்றும் ஆறும்
தண்ணீரைத் தானே குடிப்பது இல்லை.


ஊருக்குச் சிறப்பாய் விளைந்திடும்
சோற்றுக்கான தானியமும் காய்களும்
எதுவும் தானே தின்பதும் இல்லை.

சதையினைக் கொடுத்து விதையினைப் புதைக்கச்
சொல்லும் செடிகளும் மரங்களுங் கூட
எதையும் தாமே எடுத்துக் கொள்வதில்லை

பிறருக்கு அன்பைக் கொடுப்பதே விதியென
மறவா இயற்கையின் படைப்புக்கள் இருக்க
பிறரது பொருளைக் கவர்வதே குறியெனும்
இறவாப் புகழினை அடைபவன் மனிதனோ?

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (6-Jun-16, 1:39 pm)
பார்வை : 123

மேலே