தீயில் காதல் சங்கமம்

உன்னை வர்ணித்த
காலமும் மரணித்துவிட்டது
நீ என்னை தீ
வைத்து
எரித்ததால்


பல கண்கள்
என்னை பார்த்தபடி
என் கரங்கள் நெருப்பில்
உருகியதை இரசித்தபடி
நின்றன
நானும் ஓர்
மனிதன் என்பதை
மறந்து

நான் தீயில் வெந்து ஓட
கண்ணீர்துளிகளும்
என்னை நனைத்து காப்பாற்ற
முயற்சித்தது
இறக்கம் இல்லாத
மனிதர்கள் மத்தியில்


என் பாதங்கள் தீண்டாத
பாதைகளும் இல்லை
அன்று
கை கட்டிப்பார்காத
உள்ளமும் நின்றது அங்கு
என்ன முடிந்தது
என்னை முட்டாள்
என திண்டத்தான் முடிந்தது உங்களால்

என் காதல் உண்ணதம்
காண என்
அங்கங்களும் துடித்தன
என் கண்களும்
கலங்குகின்றன அவள் கூறிய
வார்த்தையால்

பக்குவமாய் கூற
உறவுகளும் இல்லை
பாவம் கொண்ட
உலகத்தில்


என் காதலை
மறந்து போக நான்
ஒன்றும் அரக்கனும்
அல்ல என்
மனதை கழட்டி
எரிந்துவிட்டு பயணிக்க

என் காதல் அவளுக்கு
புரியும்
என் உடலும் மண்ணை அடையும்
அன்றுதுடிப்பாய் எனக்காய்
கொஞ்சம்



பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (7-Jun-16, 12:39 pm)
பார்வை : 245

மேலே