மாமன் மகளே

தென்பாண்டி முத்தெடுத்து சேர்த்து
வெச்ச தேகத்துல - நான்
கோத்து வெச்ச மாலை போட
நேரம் இப்போ வந்ததடி !!
நேத்து உன்ன பாத்த போது - இப்படி
நினைக்கலையே உன்னை நானும் !
சமைஞ்ச போது என்ன செஞ்ச
எனக்குள்ள வந்து நீயும் !!
மஞ்சள் முகம் நீ காட்டி
என்ன வெச்சுப்புட்ட மயக்கத்துல !
நான் செஞ்சு வந்த ஓலைக்குச்சி
கிடக்குதடி கிறக்கத்துல !!
குச்சிக்குள்ள நீயிருக்க - உச்சி
வெயில்ல நான் கெடக்க !
உன்ன கொண்ட மனசு மட்டும்
குச்சி ஐசா உருகுதடி !!
விதவிதமா சீர் செஞ்சு வந்த
என்னை தள்ளிவிட்டு
வெறும் நகத்தை கடிக்கிறியே
என்ன சொல்ல பாதகத்தி !!
பூவால சோடிச்சு புதுப்பொண்ணா நீயிருக்க
பாவாடை சட்ட போட்டு உன்ன
பாத்த நாளு கண்ணுக்குள்ள !
பத்திரமா வசிருப்பேனே
எனக்கு உன் மேல கிறுக்கு புள்ள !!
அவன் கூட பேசாதேன்னு
ஆத்தா கிழவி சொல்லியிருப்பா
சரின்னு, வந்துடு உன் பேச்சுக்கே
நான் தவம் கிடக்கேன் !!
வைகாசியில் வந்தா ஆடியில
அனுப்பிடுவாங்கன்னு - தையில
மாலையோட தங்கமே நான் வாறேன்
காத்திரு எனக்காக கருப்பட்டி நிறத்தவளே..!